WEB BLOG
this site the web

Recent Photos

image
image
image

மோனாயி.......!!!!

அலுவலகமே ரணகளமாக இருந்தது. பங்கஜும், ஜெகனும் அடித்துக்கொள்ளாத குறைதான். NPS எனப்படும் "National Public School"-ல் தங்களின் மூன்றே வயதான குழந்தைக்கு இடம் பிடிக்க இத்தனை போராட்டம். பங்கஜை காபி -க்கு அழைத்தேன். விவரம் வேறு எப்படி வாங்குவது..?....பேசி முடித்த பின் எனக்கு தலை சுத்தாத குறைதான். "Montessori" என அழைக்கப்படும் (எங்க ஊர் அரை கிளாஸ்) அந்த வகுப்புக்கு, மொத்தமே முப்பது இடங்கள்தாம். விண்ணப்ப படிவம் மட்டும் 5000 -க்கும் மேலே விற்பனை(?) செய்ய பட்டதாம், அதுவும் 2500 ரூபாய் விலையில். காலை நான்கு மணிக்கே வரிசையில் போய் நின்ற அவனுக்கு "172" எண் கொடுக்க பட்டு, ஒரு வாரத்தில் நேர்முக தேர்வு இருக்கும் என அறிவுறுத்தபட்டது. நிதிஉதவி ஒரு லட்சமும், பருவ கட்டணம் ரூபாய் முப்பத்தி ஆறாயிரம் தயாராக வைத்து இருக்கும் படியும் அவனுக்கு சொல்லப்பட்டது.

"என்னங்கடா அநியாயம் ,,, மூணு வயசு குழந்தை படிக்க இவ்வளவா?" - என்றேன் நான்.
"சும்மாவா .."National Public School"-ல் படிக்கிறது சாதாரணமான விஷயம் இல்லை..அடுத்த வருஷம் நீயும் வருவ பாரு" - என்றான். எனக்கு குழப்பமாகவும் வெறுப்பாகவும் இருந்தது.

"எனக்கு அந்த பள்ளி தேவை இல்லை" - என்றேன்
" ஏன்? "

" இரண்டு காரணங்கள். ஒன்று அந்த பள்ளியில் என்னோட தாய் மொழி ஒரு பாடமாக இல்லை. என்னுடைய மகன் எனது தாய் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இரண்டு. இது என்னுடைய தகுதிக்கு மீறிய செயல்." - என்றேன்.

"அது எல்லாம் தேவை இல்லப்பா... அதன் ஹிந்தி இருக்கே ..அப்புறம் என்ன தமிழ்?" என்றான் ஜகன்.
"உலகத்தை பார்த்து நடந்துக்கோ..என்னோட தாய் மொழி போஜ் பூரி ...அதுல பேசவும் எழுதவும் எனக்கு தெரியாது..ஹிந்தி இருந்தா போதும் " - பங்கஜ்.

"அட கிறுக்கா ... இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்லையா? " - என்றேன் நான்.

பங்கஜ் என்னை விசித்திரமாக பார்த்தான். பங்கஜ் சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை.






சமீபத்தில் ஒரு மலையாள படம் ஒன்றினை பார்க்க நேர்ந்தது. கதையின் நாயகனான "மோனாயி" ஒரு பள்ளி சிறுவன். கூலி தொழிலாளியான அவனது தந்தைக்கு அவனை ஒரு ஆங்கில வழி பள்ளியில் சேர்ப்பதே கனவாக இருந்து வருகிறது. அவர்கள் கனவும் நிறைவேறும் நாளும் வருகிறது. நீண்ட போராட்டங்களுக்கு பின் அவன் அந்த பள்ளியில் சேர்த்து கொள்ளபடுகிறான். இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் அவன் எதிர்பாராத விதமாக மோனாயி தந்தை இறந்தவுடன் சோக மேகம் சூழ்ந்து கொள்ள, அவன் பள்ளி வாழ்க்கை திண்டாட தொடங்குகிறது. பள்ளி கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், பள்ளியில் அவமான படுத்தப்படும் மோனாயி, ஒரு நாள் அவன் சீருடை எலியால் கடித்து குதறப்பட, பள்ளியில் இருந்து விரட்டபடுகிறான். என்ன செய்வதென தெரியாமல் முழிக்கும் அவன், தந்தையின் கல்லறையில் சென்று முறையிடுகிறான். அவன் மீண்டும் பள்ளியில் படிக்க ஏதாவது செய்யுமாறும் வேண்டி கொள்கிறான்.

வேறு வழி இன்றி அவன் அரசாங்க பள்ளி ஒன்றில் சேர்ந்து படிக்க தொடங்குகிறான். பழைய பள்ளி போலின்றி இங்கே மரியாதையாக நடத்த பட்டாலும், பள்ளியின் தரமும், பள்ளி நடத்த படும் விதமும் கேவலமாக இருக்கிறது. பள்ளி மாணவர் பலர் சந்தையில் தலைமை ஆசிரியர் நடத்தும் கடையில் வேலை செய்த பின்னர், மதிய உணவுக்காக மட்டுமே பள்ளி திரும்புகின்றனர். இதை கண்டு பிடிக்கும் பள்ளி கல்வியியல் அதிகாரி, அசிரியர் அனைவரையும் சாடுகிறார். கல்வி என்பது ஒரு சமுதாய முன்னேற்றதுக்கான கருவியாக இருக்க வேண்டும் எனவும், அதை தப்பான வழியில் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என கூறும் அவர், அந்த பள்ளியை மூடுவதற்கான பரிந்துரையை அரசுக்கு கொடுக்கிறார். அந்த பள்ளியும் மூடப்படுகிறது.

தன் பள்ளி படிப்பின் எல்லா வழிகளும் மூட பட்ட நிலையில், தன் தந்தையின் கல்லறைக்கு செல்லும் வழியில், ஆடு மேய்க்க ஆள் தேவை என்ற விளம்பரம் கண்டு, "குருப்பு"வின் தோட்டத்துக்கு செல்கிறான். அவன் சிறுவன் என்று முதலில் வேலை கொடுக்க மறுக்கும் " குருப்பு", பின் அவன் கதையை கேட்ட பின் ஒத்துக்கொள்கிறார். வாரம் ரூபாய் முப்பது சம்பளம் எனவும், அவன் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து, ஒரு ஆட்டு குட்டியும் பரிசாக தருவதாக ஒத்து கொள்கிறார்.

வீட்டுக்கு செல்லும் மோனாயி, வேலை கிடைத்து இருக்கும் விவரம் கூற, அவன் அம்மா முதலில் மறுத்தாலும், அவன் அப்பாவின் காப்பீடு பணம் வந்துடன் மீண்டும் அவன் பள்ளி செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒத்துக் கொள்கிறாள். மோனாயிக்கு இந்த புதிய வேலை ரொம்பவே புடித்து போகிறது.
அவன் நாளின் பெரும்பாலான நேரங்களை குருப்புவின் தோட்டத்தில் கழிக்கிறான். ஒரு நாள் வேலை நேரத்தில் குருப்புவை பார்க்க வருகிறாள் மோனாயின் தாய். அவனது தந்தையின் காப்பீடு பணம் கிடைத்து விட்டதாகவும், இனி மோனாயி ஆடு மேய்க்க போவதில்லை எனவும் கூறுகிறாள். முதலில் வருத்த பட்டாலும், சந்தோசமாக அவனை அனுப்பி வைக்கிறார் குருப்பு.

புதிய பள்ளியில் அவன் சேர, ஒரு லட்சம் நன்கொடை எனவும், மேலும் ஆண்டு கட்டணமாக ரூபாய் 30000 எனவும் சொல்ல கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் மோனேயின் தாய். ஒரு வழியாக மனசை சமாதனபடுத்தி கொள்ளும் அவள் கேட்ட தொகையை கட்ட ஒப்பு கொள்கிறாள். இதை கண்ட மோனாயி அம்மாவுடன் சண்டை போடுகிறான். இவர்கள் இதோடு நிற்க போவதில்லை எனவும், மேலும் மேலும் பள்ளி கட்டணம் கட்ட பணம் நம்மிடம் இல்லை எனவும் வாதாடும் அவன், அப்பாவின் ரத்தத்தில் வந்த பணத்தை நான் வீணாக்க விரும்பவில்லை என கூறும் அவன், பின் அங்கிருந்து நேராக குருப்புவிடம் செல்லும் அவன், பள்ளியில் கற்றதைவிட பல விடயங்களை தான் அங்கு கற்று கொண்டதாகவும், மனமிருந்தால் அந்த தோட்டத்தை தனக்கு விலைக்கு தரும்படியும் வேண்டுகிறான். சந்தோசத்துடன் ஓப்பு கொள்ளும் குருப்பு தன்னிடம் உள்ள மண்வெட்டியை அவனிடம் தருகிறார். அதை வாங்கி கொள்ளும் அவன் ஒரு மரத்தடியில் உள்ள களையை வெட்ட தொடங்க, அவன் தந்தை மரத்தில் இருந்து அவனை பார்த்து சிரிப்பதாக படம் முடிகிறது.


தாய் மொழியில் கல்வி என்பது வெறும் கேலி கூத்தா?. காசு இல்லாதவனுக்கு தரமான கல்வி என்பது வெறும் கனவா? தாய் மொழியில் பயிலும் அந்த குழந்தைகளின் எதிர்காலம்தான் என்ன?. என்பது உட்பட பல கேள்விகளை இந்த படம் எழுப்புகிறது.

கல்வி வியாபாரம் ஆனதின் காரணம் என்ன? எங்கு போய் முடியும் இது?. நான் என் தாய் மொழியை அடுத்த தலை முறைக்கும் எடுத்து செல்ல நினைப்பது தவறா? திருந்துவார்களா கல்வி தந்தைகள்?
 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies